பூமிகா படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்… Cinema News

காக்கா முட்டை தொடங்கி இறுதியாக வந்த ‘வானம் கொட்டட்டும்’ வரையில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கோலிவுட்டில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவரின் நடிப்பில் உருவாகும் 25வது படம் ‘பூமிகா’.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் 25 வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பென்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். ‘பூமிகா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

ரதீந்திரன் ஆர் பிரசாத் என்ற இயக்குனர் இதனை எழுதி இயக்கியிருக்கிறார். இத்தாலி நாட்டை சேர்ந்த ஒளிப்பதிவாளர் இந்த Roberto Zazzara இதில் பணியாற்றியுள்ளார். படத்தின் ஷுட்டிங் முழுமையாக நீலகிரியில் நடத்தப்பட்டு இருக்கிறது. கடந்த வருடமே இந்த த்ரில்லர் படத்திற்கான ஷுட்டிங்கை துவங்கி இருக்கிறார்கள். தற்போது தான் மோஷன் போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

Leave a Reply

Your email address will not be published.