பேராசை பிடித்த மனைவி – Tamil Stories  ஒரு அழகிய கிராமத்தில் கட்டிடம் கட்டும் தொழிலாளியாக குமாரசாமி என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனின் கட்டிடம் கட்டும் திறமையை பார்த்து அந்த ஊர் மட்டுமில்லாமல் பக்கத்து ஊர்களும் அதிகமாக பாராட்டினார்கள். அவருக்கு கிடைத்த பாராட்டுகள் குமாரை ஒரு திமிர் பிடித்தவனாக மாற்றியது. சிலநாட்களிலேயே குமாரசாமிக்கு திருமணம் நடைபெற்றது. குமாரசாமி ஒரு திமிர் பிடித்தவனாக இருந்தாலும், அவனுக்கு மிகவும் அழகான என் மனைவியாக கிடைத்தாள்.  மேலும் அவள் குடும்பத்தை கவனிக்காமல் எப்பொழுதும் தன் அழகின் மேலும் தன்னை அதிகமாக அழகுபடுத்திக் கொள்வதிலும் அதிக கவனத்தைச் செலுத்தினாள். அதுமட்டுமில்லாமல் பேராசை குணம் கொண்டவளாகவும் இருந்த குமாரசாமியின் மனைவி, குமரசுவாமி தினமும் வேலைக்கு சென்ற பிறகு தன்னை இருந்த அழகு படுத்திக் கொள்வதிலேயே அதிகமான நேரத்தை செலவிட்டாள். அதுமட்டுமில்லாமல் குமரசாமி என் தாய், தந்தை எதைச் சொன்னாலும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தாள். குமாரசாமி தன் மனைவி மீது அதிக பாசம் கொண்டிருந்ததால் தன் மனைவியின் இந்த குணத்தை கண்டு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார்.

  ஒருநாள் குமாரசாமி தன் கட்டிட வேலையை முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் வீட்டிற்கு வந்தார். அப்போது குமாரசாமியின் மனைவி வேகமாக கதவின் அருகில் ஓடிவந்து தன் கணவனைப் பார்த்து, எனக்கு இன்னும் சில நாட்களில் பிறந்த நாள் வரப்போகிறது. அதனால் எனது பிறந்தநாளுக்கு நீங்கள் என்ன பரிசு தர போகிறார்கள் என்று கேட்டாள். அதைக்கேட்ட குமாரசாமி எ,அன்பான மனைவிக்கு பிறந்த நாள் வரப்போகிறதா! உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று நீயே சொல். நீ என்ன கேட்டாலும் நான் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்று பாசத்துடன் சொன்னார். குமாரசாமி இந்த வார்த்தையை சொன்னவுடன் அவனது மனைவி எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். நான் எனக்கு என்ன வேண்டும் என்று உங்களிடம் சில நாட்கள் கழித்து கேட்கிறேன் என்று சொன்னாள். குமாரசாமியின் மனைவி தன் பரிசுக்காக மிகவும் ஆவலாக இருந்தாள். ஆனால் அவளுக்கு என்ன பரிசு கேட்பது என்று தெரியவில்லை தினமும் அதைப்பற்றி நினைத்துக் கொண்டு இருந்தாள். அப்பொழுது ரோட்டில் நடந்து சென்ற ஒரு பெண்ணின் புடவையை பார்த்து மிகவும் அழகாக இருக்கிறதே இதைப் போன்றே நாமும் விலை உயர்ந்த புடவை கேட்கலாமா என்று யோசித்தாள். பிறகு கோயிலுக்கு செல்லும் பொழுது அங்கே இருக்கும் கடவுளின் நகைகளை பார்த்து நாமும் அதே போன்ற அணிகலன்களை கேட்கலாமா என்று யோசித்தாள். பிறகு திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்து மிக பொறுமையாகவும், மிக ஆழமாகவும் யோசித்து பிறகு குமாரசாமியின் மனைவியின் மனதில் ஒரு யோசனை வந்தது.

  கடைசியில் தான் அணிவதற்கு வைரம் பதித்த அழகான தங்க நகை கேட்கலாம் என்று குமாரசாமியின் மனைவி முடிவு செய்தாள். தன் பரிசை பற்றி தன் கணவரிடம் கூறுவதற்காக குமாரசாமியின் மனைவி அவர் வரும்வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். குமாரசாமி வந்தவுடன் நான் எனது பிறந்த நாள் பரிசை முடிவு செய்துவிட்டேன். எனக்கு வைரம் பதித்த தங்க நகை வேண்டும் என்று கேட்டாள். இதைக் கேட்ட குமாரசாமிக்கு மிகவும் அதிர்ச்சியானது. குமாரசாமி தன் மனைவியை பார்த்து, நீ என்ன கேட்கிறாய் என்று தெரிந்தால் கேட்கிறாயா? நீ கேட்கும் நகையின் விலை குறைந்தது பத்து லட்சமாவது இருக்கும். அதை வாங்குவதற்கு நான் பத்து வீடுகள் ஏதாவது கட்டினால்தான் அதில் ஏதாவது வருமானம் கிடைக்கும். அப்பொழுது தான் நீ சொன்ன நகையை வாங்க முடியும் என்று சொன்னார். அதற்கு குமாரசாமியின் மனைவி, நீங்கள் பத்து வீடு எல்லாம் கட்ட வேண்டாம் நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் ஐந்து வீடு கட்டினாலே நான் கேட்ட பரிசு பொருளை உங்களால் எனக்கு வாங்கித் தரமுடியும் என்று சொன்னாள்.

  நீங்கள் வாங்கும் செங்கல், சிமென்ட், ஜல்லி போன்றவற்றிற்கு கம்மியாக வாங்கி அதிகமான கணக்கு காட்டுங்கள் அப்பொழுது அதில் நமக்கு நிறைய பணம் மிச்சமாகும் என்று சொன்னாள். மேலும் இப்பொழுது உங்களிடம் வேலை செய்யும் ஆட்களை நிறுத்தி விட்டு, புதிதாக 10 நபர்களை வேலைக்கு சேர்த்து அவர்களுக்கு பாதி சம்பளம் கொடுத்தால் நிறைய பணம் மிச்சமாகும் என்றும் சொன்னாள். குமாரசாமி தன் மனைவி சொன்னதுபோல் பொய்யான கணக்கை கூறி 5 வீடுகளையும் கட்டி முடிக்கும் தருவாயில் தனது சம்பளங்களை வீட்டு முதலாளிகளிடம் இருந்து வாங்கினார். மனைவி கேட்டதை விட அதிகமான பணமே அதிலிருந்து கிடைத்தது. அதை வைத்து தன் மனைவியின் பிறந்த நாளுக்காக குமாரசாமி ஒரு நகைக்கடைக்கு சென்று விலை உயர்ந்த வைரம் பதித்த தங்க நகையை வாங்கிக் கொடுத்தார்.அந்த நகை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் அந்த நகையை கொடுத்து இருவரும் சந்தோஷப்பட்டனர். ஆனால் அவர்களை சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. குமாரசாமி கட்டிக்கொடுத்த ஐந்து வீடுகளில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. மீதமுள்ள மூன்று வீடுகளும் சொன்ன நேரத்திற்குள் கட்ட முடியவில்லை. இதனால் நஷ்டம் அடைந்த வீட்டு முதலாளிகள் குமாரசாமியின் வீட்டின் முன்பு வந்து, தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு கேட்டார்கள்.

  இதனால் குமாரசாமி பெரும் கடனாளியாக மாறினார். குமாரசாமி தன் வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவியை பார்த்து அழகு முக்கியமில்லை.  அதற்காக பொய் கூறி மற்றவர்களை ஏமாற்றும் அதுதான் மிகவும் தவறு என்று கூறி மனம் வருந்தி கண் கலங்கி நின்றார். இதைக் கேட்ட குமாரசாமியின் மனைவி தான் செய்தது மிகப் பெரிய தவறு என்பதை உணர்ந்து கணவன் வாங்கிக் கொடுத்த அந்த வைர நகை மீண்டும் கடைகளில் கொடுத்து பணமாக மாற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். அந்தப் பணத்தை வைத்து குமாரசாமி பெற்ற படங்கள் எல்லாத்தையும் அடைத்தாள். பிறகு குமாரசாமியின் மனைவி வீட்டில் இருப்பதை வைத்துக்கொண்டு நலமாகவும், தன் கணவனுடன் நல்ல வளமாகும் வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

  இதிலிருந்து அழகாய் இருப்பது முக்கியமில்லை. வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை தீர்ப்பதற்கான தன்மையும், இரக்க குணமும், பேராசை இல்லாமல் இருப்பதும் தான் முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published.